விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை -ஸ்ருதி ஹாசன்

0 114

விமர்சனங்கள் தன்னை பாதிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். ஸ்ருதி ஹாஸன் ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ‘லாபம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தபோது அவர் குண்டாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி ஹாஸன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது என்னை பாதிப்பது இல்லை.

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு அது பெரிதாக தெரியவில்லை.

அண்மையில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால், பலர் ஸ்ருதிக்கு திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். அப்பொழுது எனக்கு கஷ்டமாக இருந்தது.

எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை.

எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை.

ஏனென்றால் அனைவருக் கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன் என்கிறார் ஸ்ருதி.

பிரேக்கிற்கு பிறகு நடிக்க வந்த வேகத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

பொலிவூட்டில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் அவர்.இது தவிர அவர் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான டிரெட்ஸ் டோனில் சி.ஐ.ஏ ஏஜெண்டாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ருதி ஹாஸன். அந்த தொடரில் அக் ஷன் காட்சிகளில் நடிக்க வசதியாக பயிற்சி பெற்று வருகிறார் அவர். ஸ்ருதி ஹொலிவூட் தொடரில் நடிப்பதை நினைத்து அவரை விட அவரின் ரசிகர்கள் தான் அதிகம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப் சீரீஸ்களில் நடிக்கவும் ஸ்ருதி ஹாஸனுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் சில வாய்ப்புகளை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் வெப் சீரீஸ்களில் நடிக்கும் ஆசை அவருக்கு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!