‘களுத்துறை தொடக்கம் காலி வரை வான், தரை வழிகளில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது பொய்’

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிடுவோரை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் என்கிறார் பதில் பாதுகாப்பு அமைச்சர்

0 245

                                                                                                                                  (இராஜதுரை ஹஷான்)
‘தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கிலே தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு  எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது.ஆனால்,  இன்று தேசிய பாதுகாப்பு முழுமையாகப்  பலப்படுத்தப்பட்டுள்ளது’ என பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

இராணுவ வீரர் அசலக காமினியின் 28வது வருட நினைவு தின நிகழ்வு நேற்று சுற்றுலாத்துமை அமைச்சில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஏப்ரல் 21 தின குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்த நிலையில்,குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டவர்கள் முப்படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய காலத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தொடக்கம் காலி பிரதேசம் வரையில் வான் மற்றும் தரைவழிகளின் தாக்குதல்கள் நடத்த அடிப்படைவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பொய்யான செய்தி சமூகத்தின் மத்தியில் தற்போது பரப்பப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இவ்வாறான  வதந்திகளை பரப்பவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் போலியான செய்திகளைப் பரப்புவதை  தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பதிவிடுபவர்களை கண்காணிப்பதற்கும் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பிற்கு சவால் விடுக்கும் ஒரு செய்தி கிடைக்கப் பெறுமாயின் உரிய தரப்பினருக்கு மாத்திரம் அறிவித்தல் ஒவ்வொரு பிரஜைகளினதும் தனிப்பட்ட கடமையாகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!