மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு: 18 பேருக்கும் தடுப்புக் காவல்!

0 206

                                                                                                                                                 (எம்.மனோசித்ரா)
மாவனெல்லை உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 18 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு மாவனெல்லை நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

மாவனெல்லை உள்ளிட்ட பிரதேசங்களில் புத்தர் சிலை உடைப்பு சம்வத்துடன் தொடர்புடைய மேலும் 6 சந்தேக நபர்கள் இன்று (11) மாவனெல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் உள்ளிட்ட 18 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுப்பு வைக்குமாறு மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!