பிலிப்பைன்ஸில் ‘போதைப்பொருளுக்கு எதிரான போரினால்’ கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐ.நா தீர்மானம்

U.N. launches investigation into Philippines drug war deaths

0 129

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது.

2016ஆம் ஆண்டு ரொட்ரிகோ டுட்டர்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 6,600 பேர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக டுட்டர்டேயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000த்துக்கும் அதிகம் எனத் தெரிவிக்கின்றனர்.

ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் ஐஸ்லாந்தினால் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

18 நாடுகள் ஆதரவாகவும், சீனா உள்ளிட்ட 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இத் தீர்மானத்துக்கு பிலிப்பைன்ஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை அதிகாரிகளை விசாரணைகளை மேற்கொள்ள நாட்டுக்குள் அனுமதிப்பீர்களா என பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் வைத்து டுட்டர்டேயிடம் செய்தியாளர்கள் வினவியபோது, “அவர்கள் தமது நோக்கத்தைத் தெரிவிக்கட்டும், அதனை நான் பரிசீலனை செய்வேன்” என பதிலளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!