‘பொய்காரன்’, ‘திருடன்’ என எஸ்.பி. திஸாநாயக்கவை நோக்கி ஆக்ரோஷமாகக் கூறிய ரிஷாத்!

0 740

                                                                                                                            (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ரிஷாத் பதியுதீன் எம்.பி மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சபையில் ரிஷாத் பதியுதீன் – எஸ்.பி. திஸாநாயக்க எம்.பிக்கள் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாதென முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ரிஷாட் பதியுதீனும், இல்லை எம்மால் நிரூபிக்க முடியுமென முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான எஸ் .பி.திஸாநாயக்கவும் நாடாளுமன்றத்தில் இன்று (11) ஒருவருக்கொருவர் பகிரங்க சவால் விடுத்தனர்.

அந்த 10 குற்றச்சாட்டுக்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவை. முடிந்தால் அந்த 10 குற்றச்சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்துக்காட்டுமாறு எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுக்கின்றேன். அப்படி அவர்கள் நிரூபித்தால் நான் எனது அரசியல் வாழ்வுக்கு விடை கொடுக்கத்தயார்” என்றார்.

இதன்போது எழுந்த எஸ்.பி. திஸாநாயக்க எம்.பி உங்களுக்கு எதிராக கொண்டுவந்துள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களை எம்மால் நிரூபிக்க முடியுமென கூறி பதில் சவால் விடுத்தார். இதற்கு பதில் அளித்த ரிஷாத் பதியுதீன் எம்.பி, “எனக்கு 8000 ஏக்கர் காணிகள் இல்லை. அப்படி இருக்கின்றது என்பதனை நீங்கள் நிரூபித்தால் நான் எனது அரசியல் வாழ்வுக்கு விடைகொடுப்பேன். அதே நேரம் உங்களால் நிரூபிக்க முடியாது விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அரசியலிலிருந்து ஒதுங்கத் தயாரா? “என ரிஷாத் பதியுதீன் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் கேட்டார்.

உங்களின் குற்றங்களை எம்மால் நிருபிக்க முடியும், உங்களுக்கு,உங்கள் மனைவிக்கு,உங்கள் அப்பாவுக்கு ,உங்கள் அம்மாவுக்கு சகோதரர்களுக்கு 4000 ஏக்கர் காணிகளுக்கு மேல் இருப்பது உண்மை. அதனை நாங்கள் நிரூபிப்போம் என எஸ்.பி. திசநாயக்க பதிலுக்கு சவால் விட இருவருக்கும் இடையில் சிறிது நேரம் கடும் தர்க்கம் இடம்பெற்றது.சபையில் ஆக்ரோஷமடைந்த ரிஷாத் பதியுதீன் எம்.பி உரத்த குரலில் ‘பொய்காரன்’, ‘திருடன்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தி எஸ்.பி திஸாநாயக எம்.பியை பார்த்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!