பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பர்

0 576

                          (ஏ.எச். சித்தீக் காரியப்பர்)

வைப்பகப் படம்

பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வது என த் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தலைமையில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்துடனும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், எம்எச்..ஏ ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலி சாஹிர் மௌலானா, பைசர் காசிம், எச். எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எம் அமீர் அலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே தங்கள் அமைச்சுப் பதவிகளை கடந்த ஜுன் மாதம் 3 ஆம் திகதி இராஜினாமச் செய்துள்ளனர்.

இவர்களில் கபீர் ஹாஷிம், எம்எச்..ஏ ஹலீம் ஆகியோர் அண்மையில் மீண்டும் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!