அவுஸ்திரேலியாவை வென்ற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி #CWC2019

0 1,706

உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 223 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் 119 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஆதில் ரஷீட்  54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைப் பெற்றது. 

 ஜேசன் ரோய் 65 பந்துகளில் 85 ஓட்டங்களைக் குவித்தார். பெயார்ஸ்டோவ் 43 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜோ ரூட் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் மோர்கன்  39 பந்துகளில்  ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இங்கிலாந்து மோதவுள்ளது. இவ்விரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் இதுவரை சம்பியனாகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!