காலியில் வெளிநாட்டுப் படகில் 60 கிலோ போதைப்பொருள் : 9 பேர் கைது

Sri Lankan Navy apprehends foreign vessel carrying 60kg narcotics in southern seas

0 1,649

காலிக்கு தெற்கே கடலில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுப் படகு ஒன்றிலிருந்து 60 கிலோகிராம் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகிலிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எந்த நாட்டினதும் தேசியக் கொடியோ பதிவு இலக்கமோ இல்லாதிருந்த இப்படகை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போதுஹெரோயின் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் 60 கிலோகிராம் பொருள் படகில் இருந்தமை தெரிய வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினர் (வைப்பகப்படம்)

இதேவேளை, காலி கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் படகொன்றிலிருந்து போதைப்பொருளுடன் நால்வர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இப்படகுக்கும் மேற்படி வெளிநாட்டுப் படகுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்Nதிகக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!