உலகக் கிண்ண வலைபந்தாட்டம் இன்று ஆரம்பம்; இலங்கை – ஸிம்பாப்வே போட்டி இன்று

2019 Netball World Cup begins n Liverpool today: Sri Lanka to face zimbabwe

0 2,950

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் லிவர்பூல், எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்குகில்  இன்று ஆரம்பமாகவுள்ள உலகக் கி;ண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி அதி உயரிய ஆற்றல்களை வெளிப்படுத்தி தரவரிசையில் பத்தூம் இடத்துக்குள் வருவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை அணியைக் கொண்டுவருவதே தனது இலட்சியம் என பயிற்றுநர் திலக்கா ஜினதாச தெரிவித்தார்.

ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை முதலாவது போட்டியில் ஸிம்பாப்வேயை இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.55 மணிக்கும் வட அயர்லாந்தை  போட்டியின் இரண்டாம் நாளான நாளை பிற்பகல் 1.55 மணிக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்pதிரேலியாவை ஞாயிறன்று இரவு 7.30 மணிக்கும் சந்திக்கவுள்ளது.

இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் பலர் இடம்பெறுவதாகவும் அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி சிறந்த அனுபவம் பெற்றுக்கொண்டுள்ள தர்ஜினி சிவலிங்கம் அணிக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும் பயிற்றுநர் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டிகள், பொட்ஸ்வானாவில் நடைபெற்ற சிநேகபூர்வ சர்வதேச வலைபந்தாட்டப் போட்டிகள், லண்டனில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகள் என்பன இலங்கை வீராங்கனைகளுக்கு சிறந்த போட்டி அனுபவத்தை பெற்றுக்கொடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ஸிம்பாப்வேயுடனான இன்றைய போட்டியில் வெற்றிபெற்று உலக வலைபந்தாட்டத் தரவரிசையில் பத்தாவது இடத்தை அடைவதே தமது இலக்கு எனத் தெரிவித்த பயிற்றுநர், வட அயர்லாந்துடனான போட்டியிலும் வெற்றிபெற தமது அணி கடுமையாக முயற்சிக்கும் என்றார்.

இவ் வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் நான்கு குழுக்களில் முதல் சுற்றில் விளையாடும். முதல் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இரண்டாம் சுற்றில் ஒரு குழுவிலும் கடைசி இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மற்றொரு குழுவிலும் விளையாட தகுதிபெறும். தொடர்ந்து தரநிலை வரிசைப்படுத்தல் போட்டிகள் நடைபெறும்.

மற்றைய குழுக்கள்:

பி குழு: நியூஸிலாந்து, மலாவி, பார்படொஸ், சிங்கப்பூர்.

சி குழு: ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, பிஜி.

டி குழு: இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, உகண்டா, சமோஆ.

இலங்கை வலைபந்தாட்டக் குழாம்::

சத்துரங்கி ஜயசூரிய (அணித் தலைவி), கயனி திசாநாயக்க (உதவி அணித் தலைவி), தர்ஜினி சிவலிங்கம், தர்ஷிக்கா அபேவிக்ரம, ஹசித்தா மெண்டிஸ், தீப்பிக்கா தர்ஷனி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவன்ச, நௌஷாலி ராஜபக்ஷ, துலங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, எலிழேந்தி சேதுகாவலர். 

 
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!