காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய எயார் கனடா விமானத்தின் 35 பேர் காயம்

Clear-air turbulence injures 35 on Air Canada flight to Sydney

0 1,769

காற்றுக் கொந்தளிப்புக் காரணமாக, எயார் கனடா விமானமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 35 பேர் காயமடைந்துள்ளனர். 

கனடாவின் வன்கூவர் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி நேற்று பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.போயிங் 777-200 ரகத்தைச் சேரந்த இவ்விமானத்தில்  284 பேர் இருந்தனர்.

இவ்விமானம் அமெரிக்காவின் ஹவாய் தீவை கடந்து சென்றுகொண்டிருந்தபோது காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. இதனால் ஏற்பட்ட குலுக்கத்தினால் விமானத்தின் பயணிகள் 35 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக எயார் கனடா தெரிவித்துள்ளது

.’நாங்கள் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கினோம். விமானத்தின் கூரையில் நாங்கள் மோதிக்கொண்டோம். பொருட்கள் கீழே வீழ்ந்தன. மனிதர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்’ என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவ்விமானம் ஹவாய் தீவுக்கு திசை திருப்பப்பட்டு ஹவாய் தலைநகர் ஹொனோலுலுவில்  தரையிறக்கப்பட்டது.

சிட்னிக்கு செல்வதற்கான மற்றொரு விமானப் பயணம் ஏற்பாடு செய்யும்வரை பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!