வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டம் 2019 : ஆகஸ்டில் ஆரம்பம்

0 317

வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் (North East Premier Leagu) கால்பந்தாட்டத்தின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 

இவ் வருடம் பங்குபற்றும் 12 அணிகளுக்குமான வீரர்கள், வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் குழுமத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட பகிரங்க ஏலத்தின் மூலம் வாங்கப்பட்டார்கள்.

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் அதிகூடிய மொத்த பணப்பரிசுத் தொகையான ஒரு கோடி ரூபாவை அள்ளிவழங்கும் வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் 200 வீரர்கள் வாங்கப்பட்டமை மற்றொரு சாதனையாகும்;.
இதன் மூலம் தொழில்சார் கால்பந்தாட்டத் தரத்தினை வீரர்கள் பரீட்சிக்கவுள்ளனர். 

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களை தொழில்சார் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடச் செய்வதன் மூலம் அவர்களது கால்பந்தாட்டத் தரத்தை உயர்த்தி தேசிய அணியில் இடம்பெறச் செய்வதே வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பபடுவதன் பிரதான நோக்கமாகும்.

கடந்த வருடம் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இம்முறை ஏலத்தில் வாங்கப்படுவதன் மூலம் அவர்களது கால்பந்தாட்டத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைவதற்கும் சந்திர்ப்பத்தை வடக்கு கிழக்க ப்றீமியர் லீக் குழுமம் உருவாக்கிக்கொடுத்துள்ளது.

இது இவ்வாறிருக்கு வடக்கு கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் 12 அணிகளும் வடக்கு கிழக்கு தவிர்ந்த பிற மாவட்டங்களிலுள்ள நான்கு வீரர்களை உள்வாங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபசாலிகளும் இப் போட்டிகளில் விளையாடக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் உள்ள10ர் வீரர்களின் கால்பந்தாட்டத் தரம் இயல்பாகவே உயிரய நிலையை அடையும். 

வடக்கு, கிழக்கில கால்பந்தாட்டத் தரத்தினை சர்வதேச தரத்துக்கு ஒப்பானதாக உயர்த்தும் நோக்கில் தமிழ் கால்பந்தாட்டப் பேரவை தமது செயற்திட்டங்களைத் தூரநோக்குடன் செயற்படுத்தி வருகின்றது. 

அங்குரார்ப்பண வடக்கு கிழக்கு ப்றீமியர் கால்பந்தாட்டப் போட்டியில் டில்கோ கொன்கரர்ஸ் சம்பியனானதுடன் கிளியூர் கிங்ஸ் எவ்.சி. இரண்டாம் இடத்தையும் வல்வை எவ்.சி. மூன்றாம் இடத்தையும் மன்னார் எவ்.சி. நான்காம் இடத்தையும் பெற்றன.
இவ் வருடப் போட்டியில் 12 அணிகள் இரண்டு குழுக்களில் சொந்த மைதானம், அந்நிய மைதானம் என்ற அடிப்படையில் இரண்டு கட்டங்களில் லீக் சுற்றில் விளையாடும். 

ஏ குழுவில் நடப்பு சம்பியன் ரில்கொ கொன்கரர்ஸ், நொதர்ன் எலைட், வவுனியா வொரியர்ஸ், அம்பாறை எவெஞ்சர்ஸ், மாதோட்டம் எவ்.சி., மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

பி குழுவில் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிளியூர் கிங்ஸ், வல்வை எவ்.சி., முல்லை பீனிக்ஸ், தமிழ் யுனைட்டட், ட்ரின்கோ டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

இவ் வருடம் சம்பியன் அணிக்கு 50 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 20 இலட்சம் ரூபாவும் மூன்றாம் இடத்தக்கு 10 இலட்சம் ரூபாவும் நான்காம் இடத்துக்கு 5 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும். ஒரு கோடி ரூபா மொத்த பணப்பரிசில் எஞ்சியத் தொகை மற்றைய அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!