காருக்குள் புகுந்த பாரிய கற்றாழை; சாரதி காயம்

Saguaro Cactus pierces windshield of a car

0 1,717
பாரிய  கற்­றாழைக் குற்­றி­யொன்று, காரின் முன்­புறக் கண்­ணா­டியைத் துளைத்­துக்­கொண்டு காருக்குள் புகுந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இச்சம்­ப­வத்தில் காரின் சாரதி காய­ம­டைந்தார்.
 
அரி­ஸோனா மாநி­லத்தின் பீமா கவுன்ரி பிர­தேசத்தில், நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை காலை, கார் ஒன்று பாதையை விட்டு விலகி, உய­ர­மான கற்­றா­ழையில் (saguaro cactus) மோதி­யது. 
இதனால் கற்­றாழை முறிந்து அதன் தண்­டுப்­ப­குதி காருக்குள் முன்­புறக்  கண்­ணா­டியைத் துளைத்­துக்­கொண்டு, முன்­புற பயணி ஆச­னத்தின் பக்­க­மாக உள்ளே புகுந்­தது.
இச்­சம்­ப­வத்தில் சார­திக்கு சிறிய காயம் ஏற்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
 
39 வய­தான கெய் ஸ்கொட் என்­ப­வரே காய­ம­டைந்­துள்ளார். அவர் போதையில் வாகனம் செலுத்­தி­யி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!