‘மைத்திரியின் வெற்றிக்கு குரல் கொடுத்த இந்த வாய் இனி அவரைத் தோற்கடிக்க குரல் கொடுக்கும்! -ஹிருனிகா

0 1,789

                                                                                                                  (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட நாம் முன்வரும்போது  எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதனால் எமது உயிர் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள  ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி  பெறச் செய்வதற்காக குரல்கொடுத்த அதே வாய் இனி அவரை தோற்கடிப்பதற்காக குரல் கொடுக்குமெனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று  (12)  சிறப்புரிமை பிச்சினையை  ஒன்றை  முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதன்போது தெரிவிக்கையில்,

கடந்த ஜுலை 1ஆம் திகதி அரச  தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக  எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஜுன் 30ஆம் திகதி அரச  தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மறுநாள் நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கு வர வேண்டாமெனவும் ஜனதிபதி தன்னை அழைக்க வேண்டாமென கூறியுள்ளதாகவும் எனக்கு கூறினார்.

இதன்மூலம்  அரச தொலைக்காட்சியினால் எனக்கென ஒதுக்கப்படும் நேரத்தை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தடை செய்வதன் மூலம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு இதனை முன்வைக்குமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!