உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் கள நடுவர்களில் ஒருவராக தர்மசேன: மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல

0 1,527
குமார் தர்மசேன: 

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவராக இலங்கையின் குமார் தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

:லோர்ட்ஸில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூ ஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டிக்கான மத்தியஸ்தர், நடுவர்களின் விபரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இதன்படி, கள நடுவர்களாக குமார் தர்மசேனவும் தென்ஆபிரிக்காவின் மராயஸ் எரஸ்மஸும் பணியாற்றவுள்ளனர்.

இப்போட்டியின் மத்தியஸ்தராக இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆவது நடுவராக அவுஸ்திரேலியாவின் ரொட் டக்கரும், 4 ஆவது அதிகாரியாக பாகிஸ்தானின் அலீம் தாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சன் மடுகல்ல

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!