திருமண வீட்டில் 13 வயது தற்கொலை குண்டுதாரி தாக்குதல்: ஐவர் பலி, 40 பேர் காயம்

0 3,828

ஆப்கானிஸ்தானில் இன்று திருமண வீடொன்றில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 5 பேர் பலியானதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

13 வயதான ஒரு சிறுவனே தற்கொலை குண்டுதாரியாக தன்னைத்தானே வெடிக்கச் செய்து இத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானின் எல்லையிலுள்ள நன்கர்ஹார் மாகாணத்தின் பச்சிகரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலை தான் நடத்தவில்;லை என தலிபான் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் இதுவரை தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!