இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஹரீஸ் ஏற்பது தாமதமாகும்!

0 697

                                                                                                                           (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமாச் செய்து தற்போது மீண்டும் தங்களது அமைச்சுகளைப் பொறுப்பேற்க முஸ்லிம் எம்பிக்கள்  தீர்மானித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ்,   இராஜாங்க அமைச்சுப்பொறுப்பை உடனடியாக ஏற்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார் என நம்பகமான வட்டாரங்கள் ‘மெட்ரோ நியூஸ்’  இணையத்துக்குத் தெரிய வருகிறது.

கல்முனையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான  தீர்வைக் பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  ஹரீஸ் எம்.பியிடம் உறுதியளித்துள்ளார்.   

எனவே, கல்முனையில் தற்போது எழுந்துள்ள சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு கிடைக்கும் வரையில் தான் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்பதில்லை என ஹரீஸ்  தீர்மானித்துள்ளார்.

இதன்படி சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபித்தல், கல்முனை  வடக்கு தமிழ்ப் பிரதேச சபை (எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு) தரமுயர்த்தல் உட்பட  கல்முனையின் ஏனைய பகுதிகளின் அனைத்து விடயங்களுக்கும்  இரண்டு வாரங்களில் தீர்வை வழங்குவதாக பிரதமரால்  வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்வரை தான் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்பதில்லை என ஹரீஸ் எம்.பி தீர்மானித்துள்ளதாக  நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!