பெலிஅத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

0 163

மாத்தறை, பெலிஅத்த –  மொரகஹஹேன சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்துள்ளதாக பெலிஅத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(14) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரகஹஹேன, மஹஹீல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே காயமடைந்துள்ளவராவார்.

காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணியொன்று தொடர்பில் இருவரிடையே நிலவிவந்த பிரச்சினையின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!