ஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் விடுவிக்கத் தயார் – பிரித்தானியா தெரிவிப்பு

UK to facilitate release of Iranian tanker if it gets Syria guarantees: Hunt

0 168

பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தினால், அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்

சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறி மசகு எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்து, பிரித்தானியாவின் கடல்கடந்த பிராந்தியமான ஜிப்ரால்டரில் கடந்த வாரம் ஈரானிய எண்ணெய்க்கப்பல் ஒன்று பிரித்தானிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஈரானிய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த கப்பலை விடுவிக்குமாறு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியமைக்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தினால், அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!