நியூஸிலாந்தில் தன்னியக்க ஆயுதங்களை மீள்கொள்வனவு செய்யும் திட்டத்தின் முதல் நாளில் 224 ஆயுதங்கள் ஒப்படைப்பு

New Zealand's first gun buyback event a success, police say

0 172

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீள்கொள்வனவு செய்யும் நிகழ்வின் ஆரம்பநாளில், 169 பேரின் 224 ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு 433,682 நியூஸி. டொலர்கள் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னியக்க துப்பாக்கிகளை மீள்கொள்வனவு செய்யும் திட்டத்துக்காக 208 மில்லியன் நியூஸி. டொலர்கள் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது நான்கு மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 பேர் கொல்லப்பட்டமையை அடுத்து தன்னியக்க ஆயுதங்களின் பாவனையை நியூஸிலாந்து அரசு மட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!