நியூஸிலாந்து சம்பியனாக வேண்டும் என விரும்பும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை! காரணம்…

0 1,425

இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக அவ்வணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பாடுபடுகிறார். ஆனால், நியூ ஸிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என அவரின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ் விரும்புகிறார்.

தாய், தந்தையுடன் பென் ஸ்டோக்ஸ்


28 வயதான பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்கள். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்க் நகரிலேயே 1991 ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் உள்ளூர் கழகமொன்றில் றக்பி பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது 12 ஆவது வயதில் இங்கிலாந்துச் சென்ற பென் ஸ்டோக்ஸ், அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

எனினும், தனது தாய்நாட்டு அணியான நியூஸிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என தான் விரும்புவதாக ஜெராட் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூ ஸிலாந்து அணியை தவிர்ந்த வேறு எந்த அணிக்கு எதிராக தனது மகன்  விளையாடினாலும் அவர் விளையாடும் அணிக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் ஜெராட் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!