அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது குறித்து இறுதித் தீர்மானம் இல்லை! — பைஸல் காசிம்

0 818

                                                                                                                                   (எம்.ஆர்.எம்.வஸீம்)
முஸ்லிம் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது குறித்து இறுதித் தீர்மான மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்தார்.

பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் தரப்பு நியாயங்களை அமைச்சர் மனோகணேசன் எடுத்துக் கூறுவார். ஆனால் முஸ்லிம்களின் நியாயத்தை சரியாக கூறுவதற்கு யாரும் இல்லை. அத்துடன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுள்ளது. அதில் அவர்மீது எந்த குற்றமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே தற்போதுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதே நியாயம் என்று நினைத்தாலும் ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்பதவி எடுத்தால் தற்கொலை செய்துகொள்வதாக ரத்ன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று கல்முனை விவகாரமாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாமல் இருப்பதால் இன்னும் சில காலம் பொறுத்திருப்பதே நல்லது என்று தோன்றுகின்றது. அதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இதுவரை இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!