உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது ஆடை களைந்து ஓட முயன்ற பெண்ணின் முயற்சி முறியடிப்பு

0 2,309

லண்டனில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது, மைதானத்துக்குள் பெண்ணொருவர் ஆடை களைந்து ஓடுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதின.

நியூ ஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது, பெண்ணொருவர் ஆடைகளைந்து ஓடுவதற்காக மைதானத்துக்குள் புகுந்தார்.

எனினும், விழிப்புடனிருந்த மைதான ஊழியர்களால் அப்பெண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
ஆபாச இணையத்தளமொன்றை பிரசித்தப் படுத்தும் நோக்குடன் இவர் இவ்வாறு ஓட முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது.

ஆபாச இணையத்தளமொன்றை நடத்தும் ரஷ்ய நபர் ஒருவரின் காதலியான கீன்ஸி வெலான்ஸிகி எனும் யுவதி கடந்த மாதம் ஸ்பெய்னின் மட்றிட் நகரில்  நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட இறுதிப்  போட்டியின்போது நீச்சலுடையுடன் மைதானத்துக்குள் புகுந்ததமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று லண்டன் லோர்ட்ஸ் தைமானத்துக்குள் புகுந்த பெண், மேற்படி ஆபாச இணையத்தளத்தை நபரின் தாயார் எலீனா வலிட்ஸ்கி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!