உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து பவுண்டறிகளால் வென்றது

0 2,261

(லண்டன் லோர்ட்ஸ் அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெற்­று­வந்த 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் இங்­கி­லாந்து சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.

கிரிக்­கெட்டின் தாய­க­மான லண்டன், லோர்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் மிகவும் விறு­வி­றுப்­பையும் பர­ப­ரப்­பையும் ஏற்­ப­டுத்­திய இன்றைய  உலகக் கிண்ண இறுதிப் போட்டி 50 ஓவர்­களின் நிறை­விலும் சுப்பர் ஓவர் நிறை­விலும் சம நிலையில் முடி­வுற்­றது. அதையடுத்து நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் அதிக பவுண்ட்­றிகள் அடித்த அணி என்ற வகையில் இங்­க­ிலாந்து உலக சம்­பி­ய­னா­னது.

இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து 50 ஓவ­ர்களில் 8 விக்­கெட்­களை இழந்து 241 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து 50 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 241 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இதனை அடுத்து வழங்­கப்­பட்ட சுப்பர் ஓவரும் சம­நி­லையில் முடி­வ­டைந்­தது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து, ட்ரென்ட் பொல்ட் பந்­து­வீச (ஸ்டோக்ஸ் 3, பட்லர் 1, ஸ்டோக்ஸ் 4, ஸ்டோக்ஸ் 1, பட்லர் 2, பட்லர் 4) விக்கெட் இழப்­பின்றி 15 ஓட்­டங்­களைப் பெற்­றது.

16 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து, ஜொவ்ரா ஆச்­சரின் சுப்பர் ஓவரில் (வைட் 1, நீஷாம் 2, நீஷாம் 6, நீஷாம் 2, நீஷாம் 2, நீஷாம் 1, கப்டில் 1 ரன்­அவுட்) ஒரு விக்­கெட்டை இழந்து 15 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இதனை அடுத்து போட்­டியில் அதிக பவுண்ட்­றிகள் அடித்த அணி என்ற வகையில் 24 பவுண்ட்­றி­க­ளுடன் இங்­கி­லாந்து சம்­பி­ய­னா­னது. நியூ­ஸி­லா­ந்து 16 பவுண்ட்­றி­க­ளையே அடித்­தி­ருந்­தது.
இந்த வெற்­றி­யுடன் 44 வருட உலகக் கிண்ண வர­லாற்றில் முதல் தட­வை­யாக உலக சம்­பியன் மகு­டத்தை இங்­கி­லாந்து சூடிக்­கொண்­டது. உலகக் கிண்ண வர­லாற்றில் சுப்பர் ஓவரில் சம்­பியன் தீர்­மா­னிக்­கப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்­பமும் இது­வாகும்.

மேற்­கிந்­தியத் தீவுகள் (1975, 1979), இந்­தியா (1983, 2011), அவுஸ்­தி­ரே­லியா (1987, 1999, 2003, 2007, 2015), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) ஆகிய நாடு­களைத் தொடர்ந்து உலகக் கிண்­ணத்தை வென்ற ஆறா­வது நாடு இங்­கி­லாந்து ஆகும்.

அது­மட்­டு­மல்­லாமல் இந்­தியா (2011), அவுஸ்­தி­ரே­லியா (2015) ஆகிய நாடு­க­ளுக்கு அடுத்­த­தாக சொந்த மண்ணில் சம்­பி­ய­னான மூன்­றா­வது நாடு என்ற பெரு­மையை இங்­கி­லாந்து பெற்­றுக்­கொண்­டது.

அத்­துடன் 1979, 1987, 1992 ஆகிய வரு­டங்­களில் இறுதிப் போட்­டி­களில் விளை­யாடி இரண்டாம் இடத்தைப் பெற்ற இங்­கி­லாந்து தனது நான்­கா­வது இறுதி ஆட்ட முயற்­சியில் சம்­பி­ய­னா­கி­யுள்­ளது.

இந்த உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் பெரும்­பா­லான லீக் போட்­டி­களில் கணி­ச­மான மொத்த ஓட்­டங்கள் குவிக்­கப்­பட்­ட­போ­திலும் நொக் அவுட் சுற்றில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய எந்ந அணி­யி­னாலும் 250 ஓட்­டங்­களை எட்ட முடி­யாமல் போனமை வியப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

இறுதிப் போட்­டியில் நியூ­ஸி­லாந்­தினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 242 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து, ஜேசன் ரோய் (17), ஜொனி பெயார்ஸ்டோ (36), ஜோ ரூட் (7), அணித் தலைவர் ஒயன் மோர்கன் (9) ஆகியோர் சீரான இடை­வெ­ளி­களில் ஆட்­ட­மி­ழக்க 24ஆவது ஓவரில் 4 விக்­கெட்­களை இழந்து 86 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்­தது.

இக்­கட்­டான நிலையில் ஐந்­தா­வது விக்­கெட்டில் ஜோடி சேர்ந்த ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு­வரும் 110 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இங்­கி­லாந்தை உற்­சா­கப்­ப­டுத்­தினர்.

பட்லர் 59 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார். அவரைத் தொடர்ந்து க்றிஸ் வோக்ஸ் வந்து வேகத்­தி­லேயே 2 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அதன் பின்னர் ஸ்டோக்ஸும் லியாம் ப்ளன்­கெட்டும் அதி­ர­டியில் இறங்­கினர்.

எனினும் ப்ளன்கெட் 10 ஓட்­டங்­க­ளு­டனும் ஜொவ்ரா ஆச்சர் ஓட்டம் பெறா­மலும் ஆட்­ட­மி­ழக்க இங்­கி­லாந்து பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்­டது.

ஆனால் கடைசி ஓவரில் வெற்­றிக்கு தேவைப்­பட்ட 15 ஓட்­டங்­களை பென் ஸ்டோக்ஸ் தனி ஒரு­வ­ராகப் போராடி பெற­மு­யற்­சித்­த­ போ­திலும் அந்த ஓவரில் 14 ஓட்­டங்கள் பெறப்­ப­ட, ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்­தது. பென் ஸ்டோக்ஸ் ஆட்­ட­மி­ழக்­காமல் 83 ஓட்­டங்­களைப் பெற்றார்.

நியூ­ஸி­லாந்து பந்­து­வீச்சில் நீஷாம் 43 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் பேர்­குசன் 50 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையம் கைப்­பற்­றினர்.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த நியூ­ஸி­லாந்து, ஹென்றி நிக்கல்ஸ் (55), டொம் லெதம்,(47), கேன் வில்­லி­யம்சன் (30) ஆகி­யோரின் துடுப்­பா­ட்ட உத­வி­யுடன் சுமா­ரான மொத்த எண்­ணிக்­கையைப் பெற்­றது.

இத­னி­டையே ஹென்றி நிக்­கல்ஸும் கேன் வில்­லி­யன்­சுனும் இரண்­டா­வது விக்­கெட்டில் பகிர்ந்த 74 ஓட்­டங்­களும் ஜேம்ஸ் நீஷாம் (19), கொலின் டி ஹாண்ட்ஸ்கோம் (16) ஆறா­வது விக்­கெட்டில் பகிர்ந்த 46 ஓட்­டங்­களும் நியூ­ஸி­லாந்தின் மொத்த எண்­ணிக்­கைக்கு ஓர­ளவு வலு­சேர்ப்­ப­தாக அமைந்­தன.

இங்­கி­லாந்து பந்­து­வீச்சில் க்றிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் ப்ளன்கெட் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ், தொடர்நாயகன்: கேன் வில்லியம்சன்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!