சந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு

0 2,525

சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால்  இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த  சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம்  இன்று தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டள்ளது.  

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து இவ்விண்கலம் இன்று காலை 2.51 மணிக்கு இவ்விண்கலம் அனுப்பப் படவிருந்தது.  இது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவிருந்நது. 

செப்டெம்பர் 6 ஆம் திகதி இவ்விண்கலம் சந்திரனில் தரையிறங்குவதற்குத்  திட்டமிடப்பட்டிருந்நது.

இத்தரையிறக்கம் வெற்றியளித்தால், சந்திரனில் தரையில் மென் தரையிறக்கத்தை
(சொப்ட் லேண்டிங்) மேற்கொண்டஉலகின் 4 ஆவது நாடாக இந்தியா விளங்கும். இதுவரை முன்னாள் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகியனமாத்திரமே இதுவரை சந்திரனில் மென் தரையிறக்கத்தை மேற்கொண்ட நாடுகளாகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (இஸ்ரோ)  50 மில்லியன் டொலர் செலவில் சந்திரயான் 2 திட்டம்மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் 2 ஆவது சந்திர ஆராய்ச்சித் திட்டம் இதுவாகும்.

இதற்குமுன்  2008 ஆம் ஆண்டுசந்திரயான் 1 திட்டத்தை இந்தியா மேற்கொண்டது. சந்திரயான் 1 திட்டத்தில் விண்கலம் தரையிறக்கப்படவில்லை. மாறாகசந்திரனை ஒரு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கி, நீர், கனிப்பொருட்கள், மற்றும்சந்திரனிலுள்ள பாறைகள் குறித்த தரவுகளை சேகரிக்கும்.

இதுவரை சந்திரனின் தென் துருவப் பகுதியில் விண்கலம் எதுவும்தரையிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!