இலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல் ரயில்களை தயாரிக்கும் சீனா

0 789

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது டீசல் ரயில்­களை தயா­ரித்­துள்­ளது.புதி­ய­ரக டீசல் ரயில்­க­ளுக்­கான 90 ரயில் கார்­களை தயா­ரிக்கும் பணிகள் பூர்த்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றன.

இலங்­கைக்­காக அந்த கம்­பனி தயா­ரித்­தி­ருக்கும் நான்­கா­வது தொகுதி டீசல் ரயில்கள் இவை­யாகும். மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக் கூடி­ய­தாக இந்த ரயில்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது இலங்­கையில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள ரயில்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது புதிய ரயில்கள் குளி­ரூட்­டப்­பட்ட பெட்­டி­களை கூடுதல் எண்­ணிக்­கையில் கொண்­டுள்­ள­துடன் பய­ணிகள் தகவல் முறைமை, எல்.சி.டி. தொலைக்­காட்சி, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான மல­ச­ல­கூட வச­திகள் போன்­ற­வற்­றையும் உள்­ள­டக்­கி­ய­வை­யாக இருக்­கின்­றன.

புதிய ரயில்கள் துருப்­பி­டிக்­காத விசே­ட­மான மூலப்­பொ­ரு­ளினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையின் கடு­மை­யான வெப்­பத்­துக்கும் ஈரப்­ப­த­னுக்கும் ஈடு­கொ­டுக்­கக்­கூ­டிய தொழில்­நுட்­பங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

முன்னர் இந்த கம்­பனி இலங்­கைக்கு மூன்று தொகு­தி­க­ளாக 43 ரயில்களை ஏற்றுமதி செய்தது. இது இலங்கையில் சேவையில் உள்ள மொத்த ரயில்களில் அரைவாசிக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!