வரலாற்றில் இன்று: ஜூலை 16 : 1989-உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்

0 120

622 : முஹ­மது நபிகள் நாயகம் மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வுக்கு பயணம் ஆரம்­பித்தார். இது இஸ்­லா­மிய நாட்­காட்­டியின் தொடக்­க­மாகும்.

 1661 : ஐரோப்­பாவின் முத­லா­வது நாணயத் தாள் சுவீ­டனில் வெளி­யி­டப்­பட்­டது.

1930 : எத்­தி­யோப்­பி­யாவின் முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளி­யிட்டார்.

1945 : மான்­ஹட்டன் திட்டம்: முத­லா­வது புளுட்­டோ­னியம் அணு­குண்டு சோத­னையை ஐக்­கிய அமெ­ரிக்கா நியூமெக்­ஸிகோ மாநி­லத்தின் அல­மொ­கோத்­ரோ­வுக்கு அருகில் உள்ள பாலை­வ­னத்தில் வெற்­றி­க­ர­மாகச் சோதித்­தது.

1948 : இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நக­ரத்தை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­தது.

1950 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிப் போட்­டியில்் பிரே­ஸிலை 2:1 என்ற கோல் கணக்கில் உரு­குவே வென்­றது.

1955 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் டிஸ்­னி­லாந்து பூங்கா அமைக்­கப்­பட்­டது

1965 : பிரான்­ஸையும் இத்­தா­லி­யையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்­கப்­பட்­டது.

1969 : அப்­பலோ 11 விண்­கலம் அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் இருந்து ஏவப்­பட்­டது. இதுவே சந்­தி­ரனில் இறங்கிய முத­லா­வது மனி­தரை ஏற்றிச் சென்ற விண்­கலம் ஆகும்.

1979 : ஈராக் ஜனா­தி­பதி ஹசன் அல்-பாக்ர் ராஜி­னாமா செய்­த­தை­யடுத்து, ஜனா­தி­ப­தி­யாக சதாம் ஹுசைன் பத­வி­யேற்றார்.

1981: மலே­ஷி­யாவின் 4 ஆவது பிர­த­ம­ராக மஹதிர் முஹமட் பத­வி­யேற்றார். அவர் 22 வரு­ட­காலம் இப்­ப­த­வ­ியி­லி­ருந்தார்.

1989: தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலைவர் உமா­ம­கேஸ்­வரன் கொழும்பில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1990: பிலிப்­பைன்ஸில் 7.7 அளவு நில­ந­டுக்கம் ஏற்­பட்­டதால் 1600 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1990: சோவியத் யூனி­யனின் ஒரு குடி­ய­ர­சாக இருந்த உக்ரைன் சுயாட்சி பிர­க­டனம் செய்­தது.

1994: ருவாண்­டாவில் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

1994: ”ஷூமேக்­கர்-­லெவி 9” என்ற வாலவெள்ளி வியா­ழ­னுடன் மோதி­யது.

1999: ஜோன் எவ். கென்­ன­டியின் மக­னான ஜோன் எவ். கென்­னடி ஜூனி­யரும் அவரின் மனை­வியும் விமான விபத்­தொன்றில் கொல்­லப்­பட்­டனர்.

2004: தமிழ்­நாடு கும்­ப­கோ­ணத்தில் பாட­சாலை ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 94 பிள்­ளைகள் தீயில் கருகி மாண்­டனர்.

2006: தென் கிழக்கு சீனாவில் இடம்­பெற்ற கடற் சூறா­வ­ளி­யினால் 115 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2008 : சீனாவில் கலப்­படம் செய்­யப்­பட்ட பால்­மாவை உட்­கொண்ட 16 குழந்­தை­க­ளுக்கு சிறு­நீ­ரக கல் ஏற்­பட்­டது. இப்­பால்­மா­வினால் சுமார் 3 லட்சம் குழந்­தைகள் பாதிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

2016: யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் புதிய மாண­வர்­களை வர­வேற்கும் நிகழ்வில் இடம்­பெறவிருந்த கலா­சார நடனம் தொடர்­பாக மாணவர் குழுக்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோதல்­களில் பலர் காய­ம­டைந்­த­தை­ய­டுத்து பல்­க­லைக்­க­ழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!