வரலாற்றில் இன்று: ஜூலை 17 : 2014-எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298 பேர் பலி

0 337

1755: கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்குச் சொந்­த­மான டொடிங்டன் என்ற கப்பல் இங்­கி­லாந்தில் இருந்து திரும்பும் வழியில் மூழ்கியதால் பெறு­ம­தி­யான தங்க நாண­யங்களும் கடலில் மூழ்­கின.

1762: ரஷ்­யாவின் மூன்றாம் பீட்டர் கொல்­லப்­பட்­டதை அடுத்து அவரின் மனைவி இரண்டாம் கத்­தரீன் அர­சி­யானார்.

1791: பிரெஞ்சுப் புரட்­சியின் போது பாரிஸில் இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தல் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 50 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

1815: பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் போன­பார்ட, பிரித்­தா­னி­யர்­க­ளிடம் சர­ண­டைந்தான்.

1816: பிரெஞ்சு பய­ணிகள் கப்பல் செனெ­க­லுக்கு அருகில் மூழ்­கி­யதால் 140 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1856: அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னி­யாவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 60 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1918: ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்­க­லாசும் அவரின் குடும்­பத்­தி­னரும் போல்­ஷெவிக் கட்­சியின் உத்­த­ரவின் பேரில் கொல்­லப்­பட்­டனர்.

1918: டைட்­டானிக் கப்­பலில் இருந்து 705 பேரைக் காப்­பாற்­றிய ”கர்­பாத்­தியா” என்ற கப்பல் அயர்­லாந்­துக்கு அருகில் மூழ்­கி­யதால் 5 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1936: ஸ்பானிய உள்­நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்­மையில் அமைக்­கப்­பட்ட இட­து­சாரி அர­சுக்­கெ­தி­ராக இரா­ணுவக் கிளர்ச்சி ஆரம்­ப­மா­கி­யது.

1944: இரண்டாம் உலகப் போர்: கலி­போர்­னி­யாவில் ஆயு­தங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்­பல்கள் வெடித்­ததில் 320 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1945: இரண்டாம் உலகப் போர்: அமெ­ரிக்­காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்­தா­னி­யாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உல­கப்போர் தொடர்­பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜேர்­ம­னியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்­பித்­தனர்.

1955: கலி­போர்­னி­யாவில் டிஸ்­னி­லாண்ட்டின் ஆரம்ப நிகழ்­வுகள் தொலைக்­காட்சி மூலம் காண்­பிக்­கப்­பட்­டன.

1973: ஆப்­கா­னிஸ்தான் மன்னர் முஹ­மது சாகிர் ஷா கண் சிகிச்­சைக்­காக இத்­தாலி சென்­றி­ருந்த போது பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு அவரின் உற­வினர் முக­மது தாவுத் கான் மன்­ன­ரானார்.

1975: அமெ­ரிக்­காவின் அப்­பலோ விண்­க­லமும் சோவி­யத்தின் சோயுஸ் விண்­க­லமும் விண்­வெ­ளியில் ஒன்­றாக இணைந்­தன. இரண்டு நாடு­களின் விண்­க­லங்கள் ஒன்­றாக இணைந்­தது இதுவே முதற் தட­வை­யாகும்.

1976: கன­டாவின் மொண்ட்­ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளை­யாட்­டுக்கள் ஆரம்­ப­மா­யின.நியூஸிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரி­வித்து 25 ஆபி­ரிக்க நாடுகள் இப்­போட்­டி­களைப் புறக்­க­ணித்­தன.

1976: கிழக்குத் தீமோர் இந்­தோ­னே­ஷி­யா­வுடன் இணைக்­கப்­பட்­டது.

1981: மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்­ததால் 114 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1994: உலக கிண்ண கால்­பந்­தாட்ட இறு­திப்­பேட்­டியில் இத்­தா­லியை பிரேஸில் 3: 2 என்ற பெனால்டி கோல்­கள் அடிப்­ப­டையில் வென்ற உலக கிண்­ணத்தை வென்­றது.

1996: நியூ யோர்க்­கி­லி­ருந்து பாரிஸ் சென்­று­கொண்­டி­ருந்த போயிங் 747 விமா­ன­மொன்று நியூயோர்க் லோங் தீவுக்கு மேலாக வெடித்துச் சித­றி­யதால் 230 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1998: சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஒன்றை நிரந்­த­ர­மாக அமைப்­ப­தற்­கான உடன்­பாடு ரோம் நகரில் எட்­டப்­பட்­டது.

2006: இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா தீவில் ஏற்­பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி கார­ண­மாக 100 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

2007: பிரே­ஸிலில் விமானம் ஒன்று தரையில் விபத்துக்குள்ளானதால் 199 பேர் கொல்லப்பட்டனர்.

2017: மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 17 விமானம் யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298 பேர் கொல்லப்பட்டனர்.

2017: மாலபே நெவில் பெர்­ணான்டோ தனியார் வைத்­தி­ய­சாலை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!