எல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100 டொலர்களை அன்பளிப்பாக வழங்கிய வெளிநாட்டுப் பிரஜை

0 356

(ரெ.கிறிஷ்­ணகாந்)

இலங்­கையின் மிக முக்­கிய சுற்­றுலா மையங்­களில் ஒன்­றான எல்ல நக­ரத்தில் தனது சுய­மு­யற்­சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்­தி­வரும் இளைஞர் ஒரு­வ­ருக்கு ஆச்­ச­ரி­யப்­பட வைக்கும் வகையில் வெளி­நாட்­டவர் ஒருவர் பணப்­ப­ரிசு ஒன்றை வழங்­கி­யுள்­ளமை குறித்து யூடியூப் செனல் ஒன்று ஆவ­ணப்­படம் ஒன்றை பதி­வு­செய்­துள்­ளமை தற்­போது அனை­வ­ராலும் பேசப்­படும் ஒரு விட­ய­மாக இருக்­கி­றது.

எல்ல வீதியில் அவரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பலகை அலங்­கா­ரங்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட சிறிய தேநீர் விடு­தி­ யொன்றை இந்த இளைஞன் நடத்திச் செல்­கின்றார்.

இந்­நி­லையில், இந்த தேநீர் விடு­திக்குச் செல்­ப­வர்கள் இலங்­கையின் பல்­வேறு வகை­யான தேநீ­ரையும் சுவைப்­ப­தற்கு சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், அண்­மையில் இந்த இளை­ஞ­னது விடு­திக்கு சென்ற ஹரல்ட் பால்ட்ர் Harald Baldr என்ற நோர்வே நாட்­டவர் குறித்த இளை­ஞரின் முயற்­சியை பாராட்­டி­ய­தோடு, அவ­ரது வர்த்­த­கத்தின் விருத்­திக்­காக 1100 டொலர்­களை (சுமார் 1 இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா) பரி­சாக வழங்­கி­யுள்­ளமை பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது.

மேலும் குறித்த வெளி­நாட்­டவர், அந்தத் தேநீர் விடு­தியில் 50 ரூபாவை செலுத்தி தேநீர் கோப்பை ஒன்றை மாத்­தி­ரமே பரு­கி­யி­ருந்­தமை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

Harald Baldr உலகின் பல்­வேறு நாடு­க­ளுக்கும் சென்று பல­ருக்கும் உத­வி­ய­ளிப்­ப­துடன், மேற்படி சந்தர்ப்பங்கள் அனைத்தையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்து தனது யூடியூப் செனலின் மூலம் பதிவேற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!