நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்கும் பென் ஸ்டோக்ஸ்

0 1,065

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி யில் இங்கிலாந்து பெளண்டரிகள் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது அறிந்ததே.

இப்போட்டியின் கடைசி ஓவரின் 4 ஆவது பந்தில், பென் ஸ்டோக்ஸ் போல்ட்டின் பந்தை அடித்தாட, 2 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக ஓடும்போது, கிரீஸை நோக்கி ஸ்டோக்ஸ் பாய்ந்தார். இதன்போது, நியூஸிலாந்தின் மார்டின் கப்டில் வீசிய பந்து ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு பவுண்டறிக்கு சென்றது.

இதற்காக ஸ்டோக்ஸ், நியூஸிலாந்து அணியினரிடம் மைதானத்தில் உடன டியாக மன்னிப்பு கேட்டார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “என க்கு பேச வார்த்தைகள் இல்லை. அணியில் உள்ள அனை வரின் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்தது அற் புதமான உணர்வாக உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடியது மிகச்சிறப்பான போட்டியாக அமைந்தது. நான் என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன் னிப்பு கேட்க வேண்டும். இந்த வெற்றி எங்களுக்கு நடக்க வேண்டும் என்று நட்சத்திரங்களில் முன்பே எழுதப்பட்டுள்ளது” என கூறி னார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!