இங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் ஓர் ஓட்டம் மேலதிகமாக தவறாக வழங்கப்பட்டுள்ளது: நடுவர் சிமோன் டஃபெல்

0 1,771

நியூ­ஸி­லாந்து அணி­யு­ட­னான உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் இங்­கி­லாந்­து­அ­ணிக்கு கடைசி ஓவரில் தவ­று­த­லாக ஓர் ஓட்டம் மேல­தி­க­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது என அவுஸ்­தி­ரே­லிய நடுவர் சிமோன் டஃபெல் கூறி­யுள்ளார்.

242 ஓட்­டங்கள் எனும் இலக்கை நோக்கி இங்­கி­லாந்து அணி துடுப்­பெ­டுத்­தா­டிய போது 50 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஓட்­டங்­களை பெற முற்­பட்டார். 

அவர் இரண்­டா­வது ஓட்­டத்­துக்­காக ஓடும் போது, நியூ­ஸி­லாந்து அணியின் மார்டின் கப்டில், பந்தை விக்கெட் காப்­பா­ள­ரிடம் எறிந்தார். கப்டில் எறிந்த பந்து கிறீ­ஸுக்குள் நுழை­வ­தற்­காக பாய்ந்த ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு, பவுண்ட்­றிக்குச் சென்­றது.

இதனால் இங்­கி­லாந்து அணி வீரர்கள் ஓடிய 2 ஓட்­டங்கள் மற்றும் பந்து பவுண்­ட­றிக்குச்  சென்­ற­மைக்­காக 4 ஓட்­டங்கள் என மொத்தம் 6 ஓட்­டங்கள் வழங்­கப்­பட்­டன.

நடு­வரின் இந்த முடிவு ஆட்­டத்தின் தலை­வி­தி­யையே மாற்­றி­யது. இங்­கி­லாந்து அணி 241 ஓட்­டங்­களைப் பெற்று, ஓட்ட எண்­ணிக்­கையில் சம­நி­லையில் முடிந்­தது. அதன்பின் சுப்பர் ஓவரும் சம­நி­லையில் முடி­வ­டைய, அதிக பவுண்­ட­றி­களின் அடிப்­ப­டையில் இறுதிப் போட்­டியை வென்று உலக சம்­பியன் ஆகி­யது இங்­கி­லாந்து,

ஆனால் ஐ.சி.சி விதி­மு­றை­யின்­படி இது­போல ஆறு ஓட்­டங்­களை வழங்­கி­யமை தவறு என அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் சிமோன் டஃபெல் தெரி­வித்­துள்ளார்.

இரண்­டா­வது ஓட்­டத்தை எடுக்­கும்­போ­துதான் அது ஓவர் த்ரோவாக மாறி­யது. கப்டில் பந்தை விக்கெட் காப்­பா­ளரை நோக்கி எறியத் தொடங்­கிய போது இரண்டு துடுப்­பாட்ட வீரர்­களும் இரண்­டா­வது ஓட்­டத்­துக்­காக ஓட ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஆனால், ஒரு­வரை ஒருவர் கடக்­க­வில்லை. எனவே 2 ஓட்­டத்தை  நடு­வர்கள் கணக்கில் எடுத்துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. அந்த பந்­து­வீச்­சுக்கு மொத்­த­மாக 5 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே வழங்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் அந்த பந்­து­வீச்­சுக்கு 6 ஓட்­டங்­களை வழங்­கி­யமை ஆட்­டத்தின் பெரிய திருப்­பு­மு­னை­யாக மாறி­விட்­டது.

5 ஓட்­டங்கள் கொடுத்­தி­ருந்தால், அடுத்த பந்தை ஆதில் ரஷிட் எதிர்­கொள்ள நேரிட்­டி­ருக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இந்நிலையில், 5 ஓட்டங்­க­ளுக்குப் பதி­லாக 6 ஓட்­டங்­களை நடு­வர்கள் வழங்­கி­யமை தெளி­வான தவறு என நடுவர் சைமன் டஃபெல் தெரி­வித்­துள்ளார்.

 இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், “அந்தப் பரபரப்­பான கட்­டத்தில் ஃபீல்டர் பந்தை எறிய முயன்­ற ­போது பேட்ஸ்­மேன்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் கடந்­தி­ருப்பர்  என நடுவர் நினைத்­தி­ருப்பார்.
‘எனினும் இந்தத் தவறால் தான் நியூ­ஸி­லாந்து தோற்­றது, இங்­கி­லாந்து வென்­றது எனக் கூற முடி­யாது’ என்றும் அவர் கருத்து தெரி­வித்­துள்ளார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக இவ்­வா­றான தவ­றுகள் அவ்­வப்­போது நடக்­கின்­றன. இது இந்த விளை­யாட்டின் ஒரு பகு­தி­யாக உள்­ளது’ எனவும் சிமோன் டஃபெல் கூறினார்.

இவர் வரு­டத்தின் சிறந்த நடு­வ­ருக்­கான ஐ.சி.சி விருதை  5  தட­வைகள் வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இங்­கி­லாந்து கிரிக்கெட் பணிப்­பாளர் கவலையில்லை

எனினும், இது குறித்து தான் கரி­சனை கொள்­ள­வில்லை என இங்­கி­லாந்து கிரிக்கெட் பயிற்­றுநர் ஆஷ்லி கைல்ஸ் தெரி­வித்­துள்ளார்.  ‘ நாம் உலக சம்­பி­யன்கள், எம்­மிடம் கிண்ணம் இருக்­கி­றது. ஆதை தொடர்ந்தும் தக்­க­வைத்­துக்­கொள்ள விரும்­பு­கிறோம்’ என கைல்ஸ் தெரிவித்துள்ளார்.

 
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!