மீகொடவில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்த சொகுசு பஸ்!

0 1,349

                                                         (களுத்துறை என் ஜெயரட்னம்)
பாதுக்க பிரதேசத்தின் மீகொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஹய்லெவல் வீதியில் நேற்று (16) மாலை பஸ் ஒன்றி தீப் பற்றி முற்றாக எரிந்துள்ளது.

ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமடைந்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பஸ் சாரதி, இச் சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை. எனவும் தான் மட்டுமே பஸ்ஸை செலுத்திச் சென்றதாகவும் மின்சாரக் கோளாறு காரணமாகவே தீப்பற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

டயர் எரியும் துர்நாற்றம் வரத் தொடங்கி சில நிமிடங்களில் பஸ் வண்டி முழுவதும் தீப்பற்றியதாகவும், பஸ்வண்டியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வீதி ஓரத்தில் நிறுத்திக் கொண்டதுடன் பஸ்ஸில் இருந்து பாய்ந்து தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,வட்டரெக்க பானழுவ இராணுவ முகாமில் இருந்து தண்ணீர் பவுஸர் வரவழைக்கப்பட்டு மீகொட பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ அனைக்கப்பட்டதுடன் மீகொடை பொலிஸார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!