14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை வென்றது இலங்கை

0 1,194

(எம். எம்.சில்­வெஸ்டர்)

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்­பி­யன்ஷிப் போட்­டியின் ஆரம்பப் போட்­டியில் இந்­தி­யாவை எதிர்த்­தா­டிய நடப்புச் சம்­பி­ய­னான இலங்கை 2க்கு 1 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்டி தனது முதல் வெற்­றியை பதிவு செய்­தது.

6 நாடுகள் பங்­கேற்கும் மேற்கு ஆசிய பேஸ்போல் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் வர­வேற்பு நாடான இலங்கை, இந்­தியா, நேபாளம் ஆகி­யன குழு ஏயிலும், பாகிஸ்தான் , பங்­க­ளாதேஷ், ஈரான் ஆகி­யன குழு பியிலும் அங்கம் வகிக்­கின்­றன.

இலங்கை சுற்­ற­ுலாத்­துறை அமைச்சின் அனு­ச­ரணை மற்றும் ஆசிய பேஸ்போல் அமைப்­புடன் இணைந்து, மேற்கு ஆசிய பேஸ்போல் சம்­பி­யன்ஷிக் போட்டித் தொடரை, இலங்கை முதற் தட­வை­யாக நடத்­து­கி­றது.அணிக்கு 9 பேர் கொண்ட போட்­டி­யாக விளை­யா­டப்­ப­டும்­இப்­போட்­டியில் மொத்­த­மாக 9 இன்­னிங்ஸ்கள் உள்­ளன.

குறித்த ஓர் இன்­னிங்ஸில் முதல் பாதியில் ஒரு அணியும் மற்­றொரு பாதியில் மற்­றைய அணியும் துடுப்­பெ­டுத்­தாடும். இதில், இரண்டு அணி­க­ளி­னதும் துடுப்­பெ­டுத்­தாடும் வாய்ப்பு தலா 3 ஆட்­ட­மி­ழப்­பு­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­படும். அதா­வது, 3 ஆட்­டமி­ழப்­புக்­களின் முடிவில் குறித்த ஓர் அணியின் துடுப்­பெ­டுத்­தாடும் வாய்ப்பு நிறைவ­டையும். ஒவ்­வொரு இன்­னிங்ஸும் மாறி மாறி விளை­யா­டப்­படும். அதன்­படி 9 இன்­னிங்ஸ்­களின் முடிவில் கூடு­த­லான ஓட்­டங்­களைப் பெறும் அணி வெற்­றி­பெறும்.

திய­க­ம­வி­லுள்ள இலங்கை – ஜப்பான் பேஸ்போல் விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இப்­போட்­டியில் போட்டி நடத்தும் அணி இரண்­டா­வ­தாக துடுப்­பெ­டுத்­தா­டப்­ப­ட­வேண்­டு­மென்­பது சர்­வ­தேச பேஸ்போல் விளை­யாட்டின் விதி­யாகும். இதன்­படி முதலில் துடுப்­பெ­டுத்­தாடும் வாய்ப்பு இந்­திய அணிக்கு கிடைக்கப் பெற்­றது.

முதல் 5 இன்­னிங்ஸ்­க­ளிலும் இரண்டு அணி­க­ளாலும் ஒரு ஓட்­டத்தைக் கூட பெற முடி­யாது போனது. பின்னர் 6 ஆவது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா சார்பில் பாரத் ஒரு ஓட்­டத்தைப் பெற்றுக் கொடுக்க இந்­தியா 1 – 0 என்ற ஓட்ட கணக்கில் முன்­னிலை வகித்­தது. 7 ஆவது இன்­னிங்ஸில் அமில புஷ்­ப­கு­மா­ர­வினால் இலங்கை ஒரு ஓட்­டத்தை பெற்று சம­நிலை பெற்­றது.

8 ஆவது இன்­னிங்­ஸிலும் இரண்டு அணி­க­ளாலும் ஒரு ஓட்­டத்தைக் கூட பெற முடி­யாமல் போனது. 9 ஆவதும் இறு­தி­யு­மான இன்­னிங்ஸில் இந்­தியா மேல­தி­க­மாக ஒரு ஓட்­டத்­தைக்­கூட பெற முடி­யாமல் போனதால், இந்­தியா அணி 9 இன்­னிங்ஸ்­க­ளி­லு­மாக ஒரு ஓட்­டத்தை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டது.

இலங்­கையின் வெற்­றிக்குத் தேவை­யான ஒரு ஓட்­டத்தை கஸ்­தூரி முத­லி­யினால் பெற்றுக்கொடுக்க இலங்கை 2– 1 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது. இதேவேளை, பலமிக்க பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஈரான் 1–11 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் தோல்வியைத் தழுவியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!