மீண்டும் இணையும் கமல்- ரஹ்மான்

0 229

பல ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரிக்க முடிவு செய்திருந்த படம் ‘தலைவன் இருக்கிறான்’. அதன் பிறகு ‘விஸ்வரூபம் 2 ஆம் பாகம், ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவனம்’, ‘சபாஷ் நாயுடு’, ‘இந்தியன் 2’ என வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகி விட்டார். இதனால் அரசியலை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடிக்க திட்டமிடுகிறார். ‘இந்தியன் 2’ ஆம் பாகம் அப்படி ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அது டேக்அப் ஆகாமல் அப்படியே நிற்கிறது.

இந்த நிலையில் தான் அவர் தனது ‘தலைவன் இருக்கிறான்’ கதையை தூசி தட்டி எடுக்கிறார்.

இதனை அவரது ராஜ்கமல் இண்டர்நெஷனல் நிறுவனத்தின் சார்பில் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

படத்தை பிரமாண்டமாக உருவாக்க இருப்பதால் தனது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஜிப்ரானை விட்டு, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த கமல் படத்தின் பாடல்கள் குறித்து விவாதித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ‘தலைவன் இருக்கிறான் ’ படத்தில் தான் பணியாற்ற இருப்பதை உறுதி செய்திருக்கிறார். கமலும் இதனை உறுதிப்படுத்திப்படுத்தி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!