‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத் தெரிவித்து வவுனியாவில் தமிழ் மக்கள் போராட்டம்!

கன்னியா வெந்நீரூற்றுப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சுடுநீர் ஊற்றியதற்கும் கண்டனம்!

0 410

                                                                                                                (ஓமந்தை)
திருமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விஹாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடு நீர்த்தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பௌத்த மதத்துக்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர்   சிவனேசன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் ஏன் கன்னியாவுக்கு சென்றார்கள்?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விஹாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள பௌத்த மத பயங்கரவாத்தை நிறுத்து, தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க ஐயேராப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
879 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்ட கொட்டகைகக்கு முன்பாகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!