இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்

0 1,853

இலங்கையில் சீதை அம்மன் கோவிலொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் ,எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் புதிய சொற்போர் ஒன்று செவ்வாயன்று மூண்டது என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இலங்கையில் சீதை அம்மன் ஆலயமொன்றை கட்டுவதற்கு தீர்மானித்து அன்றிருந்த இலங்கை அரசாங்கத்திடம் அனுமதியை எதிர்பார்த்திருந்தது.

‘தற்போதைய முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான அரசாங்கத்தின் அதிகாரிகள் சீதை அம்மன் இலங்கைக்கு கடத்தப்பட்டாரா? இல்லையா?

என்பதை உறுதி செய்து கொள்வதற்கு இலங்கையில் ஆய்வொன்றை நடத்துவதற்கு விரும்புகின்றார்கள்.

இதைவிட கேலிக்கூத்தான வேறு ஏதாவது விடயம் இருக்க முடியுமா? முழு உலகமும் அறிந்த உண்மையொன்றை ஆராய்ந்து பார்ப்பது குறித்து பேசுவதன் மூலம் கோடி கணக்கான மக்களின் உணர்வுகளை கமல்நாத் அரசாங்கம் புண்படுத்துகின்றது’ என்று முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘சீதாஜி இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு இலங்கையிலுள்ள அசோக வனத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்று முழு நாட்டிற்கும்,முழு உலகத்திற்கும் தெரியும். அங்கு அவர் அக்கினிப் பரீட்சைக்கும் உள்ளாக்கப்பட்டார்.

இலங்கைக்கு நான் விஜயம் செய்த போது சீதாஜி தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பிரமாண்டமான கோயிலொன்று கட்டப்பட வேண்டும் என்று எனக்கு தோன்றியது.வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து உறுதிப்படுத்துவது குறித்து கமல்நாத் அரசாங்கம் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்றும் சௌகான் கூறியிருக்கிறார்.

சௌகானின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய பிரதேச பொதுத் தொடர்புகள் அமைச்சர் ‘பி.சி சர்மா இந்த ஆலயத்தை கட்டுவதற்கு அப்போதைய சௌகான் அரசாங்கம் எந்தவித உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை. இலங்கையில் சீதா தங்கவைக்கப்பட்ட இடத்தில் ஆலயம் நிர்மாணிப்பது குறித்து பேசுவதன் மூலம் சௌகான் அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார்’ என்று கூறியிருக்கிறார்.

மாநில அரசாங்கம் இந்த விடயத்தை ஆராய்ந்து அது தொடர்பில் செய்ய கூடியது என்ன என்பதை பரிசீலிக்கும் அன்றைய சௌகான் அரசாங்கம் உறுதி மொழிகளை வழங்குவதில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருந்தது. செயலில் எதுவுமே காட்டியதில்லை என்று சர்மா குற்றச் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!