கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசத் தயார்!- மாவை சேனாதிராஜா

0 267

                                                                          (ஆர்.யசி )
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பின்னிற்காது.

அதேவேளை, முஸ்லிம் மக்களுடன் முரண்பாடு, விரிசலை ஏற்படுத்தவும் நாம் விரும்வில்லை. ஆகவே எமது தரப்பு நியாயங்களை முன்வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்

இந்த அரசாங்கம் ஆட்சியை அமைத்த காலத்தில் இருந்து அரசியல் தீர்வுகள் குறித்து பேசிக்கொண்டுள்ளது. ஆனால் தீர்வுகள் குறித்த முயற்சிகள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்ற முயற்சிகள் இடைநடுவே நிற்கின்றது. நாடாளுமன்ற வழிநடத்தலில் குழுவில் எந்த முன்னகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இவற்றை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!