100 சர்வதேசப் போட்டிகளைப் பூர்த்தி செய்த தர்ஜினி சிவலிங்கத்துக்குப் பாராட்டு

0 4,210

(இங்­கி­லாந்தின் லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)

இலங்கை வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி தர்­ஜினி சிவ­லிங்கம் தனது 100 ஆவது சர்­வ­தேச வலை­பந்­தாட்டப் போட்­டியில் விளை­யாடி சாதனை நிலை­நாட்­டினார்.

இதனை முன்­னிட்டு தர்­ஜி­னியைப் பாராட்டி கௌர­விக்கும் வைபவம் ஒன்று லிவர்­பூலில் வீராங்­க­னைகள் தங்­கி­யுள்ள ஹொலிடே இன் ஹோட்­டலில் நேற்று பிற்­பகல் நடத்­தப்­பட்­டது.

அணி முகா­மை­யாளர் ட்ரிக்ஸி நாண­யக்­கார தலை­மையில் நடை­பெற்ற இவ் வைப­வத்தில் பயிற்­றுநர் திலக்கா ஜின­தாச, அணித் தலைவி சத்­து­ரங்கி ஜய­சூ­ரிய, ஏனைய வீராங்­க­னைகள் ஆகியோர் கலந்­து­கொண்டு தர்­ஜி­னியை வாழ்த்­தினர்.

இந்த வைப­வத்தில் பேசிய தர்­ஜினி, 
“நான் இப்­படி ஒரு வைப­வத்தை எதிர்­பார்க்­க­வில்லை.

எனவே இதனை ஏற்­பாடு செய்து என்னைக் கௌர­வித்­த­மைக்­காக அணி முகா­மை­யாளர், பயிற்­றுநர் மற்றும் வீராங்­க­னை­க­ளுக்கு நன்றி கூறு­கின்றேன்.

சர்­வ­தேச வலை­பந்­தாட்­டத்தில் என்னை அறி­மு­கப்­ப­டுத்­திய ட்ரிக்ஸி நாண­யக்­கா­ர­வுக்கு விசேட நன்­றி­களைத் தெரி­விக்­கின்றேன்.

அத்­துடன் எனக்கு ஒத்­து­ழைப்பு நல்கி உற்­சா­கப்­ப­டுத்தி இந்­நி­லைக்கு உயர்த்­திய பயிற்­றுநர் திலக்கா ஜின­தாச, ஏனைய பயிற்­று­நர்கள், சக வீராங்­க­னைகள், இர­சி­கர்கள் அனை­வ­ருக்கும் நன்றி” என்றார்.  பிஜி அணிக்கு எதி­ராக லிவர்பூல் எம். அண்ட் எஸ்.

பாங்க் எரினா விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் விளை­யா­டி­யதன் மூலம் தர்­ஜினி சிவ­லிங்கம் 100ஆவது சர்­வ­தேச வலை­பந்­தாட்டப் போட்­டியில் விளை­யா­டிய மூன்­றா­வது இலங்கை வீராங்­கனை ஆனார். இதற்கு முன்னர் காயத்ரி மற்றும் சஷிக்கா ஆகியோர் 100 சர்­வ­தேச வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யா­டிய இலங்கை வீராங்­க­னை­க­ளாவர்.

இலங்கை வலை­பந்­தாட்ட அணியில் 2009இல் அறி­மு­க­மான தர்­ஜினி சிவ­லிங்கம் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக வலை­பந்­தாட்ட விளை­யாட்டில் ஈடு­ப­ட­வில்லை. குறிப்­பிட்ட இந்தக் காலப்­ப­கு­தியில் பத­வி­யி­லி­ருந்த நிரு­வா­கி­களும் பயிற்­று­நர்­களும் தர்­ஜி­னியை கருத்­திற்­கொள்­ளாமல் புறக்­க­ணித்து வந்­தனர்.

எனினும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் 2018 இல் தொழில்சார் வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யாடி தனது ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய தர்­ஜினி சிவ­லிங்கம் அங்கு அதி சிறந்த வீராங்­கனை விருதை வென்று தனது திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இதனை அடுத்து தற்­போ­தைய பயிற்­றுநர் திலக்கா ஜின­தாச அவரை மீண்டும் அணியில் இணைத்து உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் விளை­யாட வைத்தார். யாழ்ப்பாணம் ஈவினை, புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வயாவிளான் தேசிய பாடசாலையின் பழைய மாணவியுமான 40 வயதான தர்ஜினி சிவலிங்கம் 6 அடி 10 அங்குலம் உயரமானவர். இவர்தான் வலைபந்தாட்ட அரங்கில் மிக உயரமானவராவார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!