கஞ்சிபானை இம்ரானுக்கு எதிரான முதல் ‘பீ ‘அறிக்கை சட்ட விரோதமானதாம்; சட்டத்தரணியின் நியாயப்படுத்தல் தொடர்பில் விளக்கமளிக்க சி.சி.டி. பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

0 276

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பாதாள உலகத் தலை­வ­னான கஞ்­சி­பானை இம்ரான் தொடர்பில் பொலிஸார் நீதி­மன்­றுக்கு முன்­வைத்­துள்ள முதல் பீ அறிக்கை சட்­ட­வி­ரோ­த­மா­னது என, கஞ்­சி­பானை இம்­ரானின் சட்­டத்­த­ரணி முன்­வைத்­துள்ள விட­யங்கள் தொடர்பில் நீதி­மன்­றுக்கு விளக்­க
­ம­ளிக்க சி.சி.டி. எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியை எதிர்­வரும் 24 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. கொழும்பு மேல­திக நீதி­வானால் நேற்று இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

சந்­தேக நப­ரான பாதாள உலகத் தலைவன் கஞ்­சி­பானை இம்ரான் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரனி டிரந்த வல­லி­யத்த முன்­வைத்த வாதங்­களை ஏற்றே கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி சில்வா, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

நேற்று கஞ்­சி­பானை இம்ரான் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த, பிர­தா­ன­மான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து வாதிட்டார்.

இந்த வழக்கில் பொலிஸார் தனது சேவை பெறுநர் தொடர்பில் நீதி­மன்­றுக்கு முன்­வைத்த முதல் பீ அறிக்கை சட்ட விரோ­த­மா­னது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி முதல் விட­ய­மாக முன்­வைத்து வாதிட்டார்.

அதனால் அது தொடர்பில் விளக்கம் கோர கொழும்பு குற்­றத் த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியை நீதி­மன்­றுக்கு அழைக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அந்தக் கோரிக்­கை­யையே நீதி­மன்றம் ஏற்­றுக்­கொண்டு, சி.சி.டி. பொறுப்­ப­தி­கா­ரியை நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­த­ர­விட்­டுள்­ளது.

அத்­துடன் தற்போது சி.சி.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தனது சேவை பெறு­நரை நீதி­மன்றில் ஆஜர் செய்ய உத்­த­ர­வி­டு­மாறும் இந்த விவ­காரம் தொடர்பில் விளக்கம் கோர சட்ட மா அதி­பரை நீதி­மன்­றுக்கு அழைக்­கு­மாறு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த மேலும் இரு கோரிக்­கை­களை முன்­வைத்தார்.

எவ்­வா­றா­யினும் சட்ட மா அதி­பரை மன்­றுக்கு அழைப்­பது உள்­ளிட்ட இரு விடயங்கள் தொடர்பில் நேற்று எவ்­வித உத்­த­ர­வு­களும் பிறப்­பிக்­கப்­ப­டாத நிலையில், அது தொடர்­பி­லான உத்­த­ரவை எதிர்­வரும் 19 ஆம் திகதி பிறப்­பிப்­ப­தாக அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!