எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் இருவரை நாளைக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

0 204

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்­கையைச் சுற்­றி­யுள்ள கடலில் எவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்துச் சென்ற சம்­பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செய­லாளர் மற்றும் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் ஆகி­யோரை  நாளைக்குள் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செய­லாளர் சமன் திஸா­நா­யக்க மற்றும் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் தம­யந்தி ஜய­ரத்ன ஆகி­யோரே கைது செய்­வது தொடர்பில் ஆலோ­சனை வழங்கு­மாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன சட்ட மா அதிபர் தப்­புல டி லிவே­ரா­விடம் முன்­வைத்த கோரிக்­கைக்கு அமை­வாக இந்த கைதுக்­கான உத்­த­ரவு வழ­ங்­கப்­பட்­ட­தாக சட்ட மா அதி­பரின் செய்தித் தொடர்­பாளர் அரச சட்­ட­வாதி நிஷாரா ஜய­ரத்ன தெரி­வித்தார்.

சமன் திஸா­நா­யக்க மற்றும் தம­யந்தி ஜய­ரத்ன ஆகி­யோரை இந்த விவ­கா­ரத்தில் ஏன் கைது செய்ய வேண்டும் என்­பது தொடர்பில் விரி­வாக பொலிஸ் மா அதி­ப­ருக்கு விளக்­கி­யுள்ள சட்ட மா அதிபர் தப்­புல டி லிவேரா, சமன் திஸா­நா­யக்க உயர் நீதி­மன்றில் முன்­வைத்த அடிப்­படை உரிமை மீறல் மனு கூட அவ­ரது மனுவில் எந்­த­வி­த­மான நியா­ய­மான கார­ணி­களும் இல்லை எனக் கருதி நிரா­க­ரிக்­கப்பட்­டுள்­ள­தாக சுட்­டிக் கா­ட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில் சமன் திஸா­நா­யக்­க­வுக்கு மேல­தி­க­மாக பாது­காப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் தம­யந்தி ஜய­ரத்­ன­வையும் கைது செய்து எதிர்­வரும் 19 ஆம் திக­திக்கு முன்னர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு சட்ட மா அதிபர் அறி­வித்­துள்ளார்.

இத­னி­டையே இந்த விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி, தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் சமன் திசா­நா­யக்க தாக்கல் செய்த முன்­பிணை மனு­வையும் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று நிரா­க­ரித்­துள்­ளது. கோட்டை நீதிவான் ரங்க திசா­நா­யக்க முன்­னி­லையில் குறித்த மனு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே அம்­ம­னுவை நிரா­க­ரித்து அவரால் உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ளது.

அவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறு­வ­னத்தால் காலி கடலில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­ய­சாலை தொடர்பில் தம்மைக் கைது செய்­யு­மாறு சட்­டமா அதி­பரால் பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ள­மையால் தனக்கு முன்­பிணை வழங்­கு­மாறு சமன் திசா­நா­யக்க மனு ஊடாக கோட்டை நீதி­மன்றில் கோரிக்கை விடுத்­துள்ளார்.

சமன் திசா­நா­யக்க உள்­ளிட்ட 8 பிர­தி­வா­தி­களைக் கைது செய்து துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் அவர்­களை காலி நீதவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­து­மாறு சட்­டமா அதி­பரால் பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடந்த 7ஆம் திகதி முதன் முறை­யாக அறி­விக்­கப்­பட்­டது.

அதற்­க­மைய கடந்த 8ஆம் திகதி சமன் திசா­நா­யக்க கொழும்பு – கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் முன்­பிணை மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அந்த மனு தொடர்பில் தீர்ப்­ப­ளித்த கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழான குற்­றங்­க­ளுக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் நீதிவான் நீதி­மன்­றுக்கு இல்லை என்­பதைக் கருத்தில் கொண்டு முன் பிணைக் கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

இந்­நி­லை­யி­லேயே நேற்று மீளவும் பொலிஸ் மா அதி­ப­ருக்கு ஆலோ­சனை கடிதம் அனுப்­பிய சட்ட மா அதிபர் தப்­புல டி லிவேரா, எதிர்­வரும் 19 ஆம் திக­திக்கு முன்னர் சமன் திஸா­நா­யக்­கவைக் கைது செய்ய உத்­த­ர­விட்டுள்ளார்.

முன்­ன­தாக கடந்த 7 ஆம் திகதி சட்ட மா அதிபர் வழங்­கிய ஆலோ­ச­னை­களின் பிர­காரம், ஓய்­வு­பெற்ற இரா­ணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்­ணான்டோ, ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கரு­ணா­ரத்ன எகொ­ட­வல, எவன்கார்ட் தலைவர் நிசங்க சேனா­தி­பதி, கடற்­படை ஓய்­வு­பெற்ற கொமாண்டர் விஷ்­வஜித் நத்­தன திய­ப­ல­னகே, தற்­போ­தைய தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செய­லா­ளரும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் மேல­திக செய­ல­ரு­மான சமன் திஸா­நா­யக்க, ஓய்­வு­பெற்ற எயார் வைஸ் மார்ஷல் பீ.டி.பிரே­ம­சந்ர, பாது­காப்பு அமைச்சின் முன்னாள் மேல­திக செயலர் தம­யந்தி ஜயரத்ன, ரக்னா லங்க நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரையே கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இதில் பலர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், ரக்னா லங்கா நிறுவனத் தலைவர் விக்டர் சமரவீர மட்டும் சி.ஐ.டி.யில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!