2,393 கிலோ பீடி இலை, புகையிலையுடன் மூவர் கடற்படையினரால் கைது!

0 681

பீடி இலை மற்றும் புகையிலையை சட்டவிரோதமாக கடத்திய சந்தேகத்தில் மூவர் நேற்று (18) யாழ்ப்பாணம் மண்டதீவு சந்தியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மண்டதீவு சந்தியில் உள்ள வீதிச் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றைச் சோதனைக்கு உட்படுத்தியபோதே 44 பொதிகளாக காணப்பட்ட 1,359 கிலோ பீடி இலைகள் மற்றும் 31 பொதிகளாக காணப்பட்ட 1,034 கிலோ புகையிலை ஆகியன கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுடன் பீடி இலை, புகையிலை மற்றும் லொறி மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!