ஹெரோயினுடன் கைதான பட்டதாரியான முன்னாள் இராணுவ அதிகாரி!

காதலி தன்னைக் கைவிட்ட வேதனையைத் தாங்க முடியாமையினாலே போதைப் பொருளுக்கு அடிமையானதாகத் தெரிவிக்கிறார்!

0 586

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில்  பட்டதாரி ஒருவரை ஹெரோயின் பக்கெற்களுடன் உடுவேரிய பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் இராணுவத்தில் பணியாற்றிவிட்டு விலகிய அதிகாரி  என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது உள்ளாடைக்குள் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொண்டு  வீதி ஒன்றில் நின்றிருந்து போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதானவர் என்றும், தான் காதலித்த தனது காதலி தன்னைக் கைவிட்டுவிட்டு சென்றதால் அதன் வேதனையைத் தாங்க முடியாத நிலையிலேயே போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் போதைப் பொருள் பாவனைக்கு பணம் இல்லாத காரணத்தினால் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டதாக பொலிஸாா் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!