மஹாநா­யக்க தேரர்­களை அவ­ம­தித்து ரஞ்சன் ராம­நா­யக்க வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு அக்­மீ­மன பிர­தேச சபையில் கடு­மை­யான எதி­ர்ப்பு

0 298

(இரா­ஜ­துரை ஹஷான்)

மஹாநா­யக்க தேரர்­களை அவ­ம­திக்கும் விதத்தில் இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்த­தாகக் கூறப்­படும் கருத்து மற்றும் சமுர்த்திக் கொடுப்­ப­ன­வு­களில் முறை­கே­டுகள் இடம்பெற்­றுள்­ள­தாகக் குறிப்­பிட்டு அக்­மீ­மன பிர­தேச சபையில் பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்கள் வெளிப்­ப­டுத்­திய எதிர்ப்­பினால் நேற்று சபை நட­வ­டிக்­கை­களில் அமை­தி­யற்ற தன்மை ஏற்­பட்­டது.

இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­ய­கக்க, மஹாநா­யக்க தேரர்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்தை வன்­மை­யாக கண்­டிப்­ப­தற்கும் சமுர்த்தி கொடுப்­ப­ன­வுகள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மாத்­திரம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது என்ற குற்­றச்­சாட்டை முன்­வைக்கும் வித­மா­கவே பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பி­னர்கள் சபை கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சபை அமர்வின் போது பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பி­னர்­க­ளுக்கும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்டு சபை நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. சமுர்த்தி கொடுப்­ப­ன­வு­களைப் பகிர்ந்­த­ளிக்கும் போது பாரிய முறை­கே­டுகள் இடம்பெற்­றுள்­ளன.

அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி குறைந்த வரு­மா­னத்தை பெறும் குடும்­பங்­க­ளுக்கு மாத்­திரம் சமுர்த்தி கொடுப்­ப­ன­வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பினர் தர்­ஷன நில்­கு­மார சபையில் யோச­னை­யினை முன்­வைத்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ரமே சமுர்த்தி கொடுப்­ப­ன­வுகள் அதிகம் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக குறிப்­பிட்­ட­தற்கு கடு­மை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­திய எதிர்த் தரப்பின் தலைவர் ப்ரீதி காமினி கட­ந்த அர­சாங்­கத்தில் சமுர்த்தி கொடுப்­ப­ன­வுகள் பகி­ரங்­க­மாக ஆளும் தரப்பின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. கடந்த காலங்­களில் அர­சியல் பழி­வாங்­க­லினால் ஒதுக்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் மாத்­தி­ர­மல்ல அனை­வ­ருக்கும் நியா­ய­மான முறையில் சமுர்த்தி வழங்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க அண்­மையில் ஊடகம் ஒன்­றுக்கு இவ்­வாறு கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.  “நாட்டில் இன்று பிக்­கு­மாரே அதிக சுக­போ­கங்­களை அனு­ப­விக்­கின்­றனர். எனக்கு தெரிந்த குடும்­ப­மொன்று இருக்­கி­றது.

அவர்­களில் தாயும் தந்­தையும் போதைப்­பொருள் விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் தற்­போது வெலிக்­கடை சிறைச்­சா­லையில் தண்­டனை அனு­ப­விக்­கின்­றனர். அநா­த­ர­வான அவர்­களின் பிள்­ளைகள் மூவ­ரையும் விஹா­ரைக்கு வழங்­கி­ய­போது அங்கு அவர்­க­ளுக்கு கடு­மை­யாக பாலியல் தொந்­த­ர­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

“பாதிக்­கப்­பட்ட ஒருவர் வலஸ்­முல்­ல­யி­லி­ருந்து என்னைத் தொடர்­பு­கொண்­டு பொலிஸ் நிலை­யத்தில் தனது முறைப்­பாட்டை ஏற்க மறுக்­கின்­றனர் என்றார். அதற்கு கார­ணம், விஹா­ரா­தி­ப­தி­க­ளுக்கு ஏற்ப சட்டம் வளைந்­து­கொ­டுக்­கி­றது. இவ்­வா­றாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மன­நி­லை­ மாற்­ற­ம­டை­கி­றது. அவர்கள் தான் அனு­ப­வித்­த­வற்றை பிற்­கா­லத்தில் விஹா­ரைக்கு வரும் சிறு­வர்­க­ளுக்கும் செய்­கின்­றனர்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட பிக்­குமார் சமூ­கத்தின் மத்­திக்கு வரு­கின்­றனர். தற்­போது கூச்­ச­லிடும் பிக்­கு­மாரை அவ­தா­னி­யுங்கள். அவர்­களில் 90 சத­வீ­த­மா­னோர், சிறு­வ­யதில் ஓரினச் சேர்க்­கையால் பாதிப்­ப­டைந்­து, குழப்­ப­ம­டைந்த மன­நி­லை­யி­லேயே உள்­ளனர். இவர்­க­ளுக்கு இரத்­தம்தான் தேவை. அவர்களது பெயர் குறிப்பிடாவிட்டால் சமூகத்துக்கு அவர்கள் யார் யார் என்பது தெரியும்.

இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று கைக்கூப்பி, நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என எமது அரசியல்வாதிகள் கேட்கின்றனர். இத்தகைய அமைப்பில் செயற்படும் ஒரே நாடு இலங்கையே” என குறித்த காணொளியில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!