இன்று இரண்டு சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிகள் கொழும்பு எதிர் கண்டி,தம்புள்ளை எதிர் காலி

0 43

(எம்.எம்.சில்­வெஸ்டர்)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்று வரும் 19 வய­துக்­குட்­பட்ட 50 ஓவர்கள் கொண்ட சுப்பர் மாகாண கிரிக்கெட் தொட­ருக்­கான இரண்டு போட்­டிகள் இன்று நடை­பெ­ற­வுள்­ளன. 

கொழும்பு றோயல் கல்­லூரி வீரர் கமில் மிஷாரா தலை­மை­யி­லான கொழும்பு அணிக்கும், கண்டி திரித்­துவ கல்­லூரி வீரர் ருவன் பீரிஸ் தலை­மை­யி­லான கண்டி அணிக்கும் இடை­யி­லான போட்டி ரங்­கிரி தம்­புள்ளை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு அணி தம்­புள்ளை அணி­யையும், கண்டி அணி காலி அணி­யையும் தத்­த­மது ஆரம்பப் போட்­டி­களில் வெற்­றி­கொ­ண்­டி­ருந்­தன. இந்த இரண்டு அணி­களும் இன்று நடை­பெறும் போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்றால் அரை இறு­திக்­கான வாய்ப்பை அதி­க­ரித்­துக்­கொள்ளும். 

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று நடை­பெ­ற­வுள்ள மற்­றைய போட்­டியில் றிச்மண்ட் கல்­லூரி வீரர் தவீஷ அபிஷேக் தலை­மை­யி­லான காலி அணியும், வென்­னப்­புவ புனித ஜோசப் வாஸ் கல்­லூரி வீரரும் 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணித் தலை­வ­ரு­மான நிப்புன் தனஞ்­சய தலை­மை­யி­லான தம்­புள்ளை அணியும் ஒன்­றை­யொன்று எதிர்த்தாடுகின்றன.  இரண்டு போட்டிகளும் இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!