14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்லவர் போட்டி; இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகு வெற்றி

0 111

(எம். எம்.சில்­வெஸ்டர்)

14ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்­லவர் போட்­டியின் இரண்­டா­வது ஆட்­டத்தில் நேபா­ளத்தை எதிர்த்­தா­டிய இலங்கை 13–0 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டை­யிலும், பங்­க­ளா­தேஷை எதிர்த்­தா­டிய பாகிஸ்தான் 17 க்கு 0 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டை­யிலும் இல­கு­வாக வெற்­றி­யீட்­டின.

ஏ குழுவில் இலங்­கையும்
பி குழுவில் பாகிஸ்­தானும் தத்­த­மது முதல் இரண்டு போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்று முன்­னிலை வகிக்­கின்­றன.

ஆசிய பேஸ்போல் அமைப்­புடன் இணைந்து இலங்கை சுற்­ற­லாத்­துறை அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் மேற்கு ஆசிய பேஸ்போல் வல்­லவர் போட்­டியை இலங்கை பேஸ்போல் சங்கம் முதற் தட­வை­யாக நடத்­து­கி­றது.

திய­க­ம­வி­லுள்ள இலங்கை – ஜப்பான் பேஸ்போல் விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை, நேபாளம் அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டியில் ஐந்து இன்­னிங்ஸ்­க­ளி­லேயே முடிவு எட்­டப்­பட்­டது.

இதில் இலங்கை 13 ஓட்­டங்­களை பெற்­ற­துடன் நேபா­ளத்­துக்கு ஒரு ஓட்­டம்­ கூட கிடைக்­க­வில்லை.

இலங்கை தனது முதல்  இன்­னிங்ஸில் ஒரு ஓட்­டத்­தையும், இரண்­டா­வது இன்­னிங்ஸில் சிறப்­பாக விளை­யா­டி 8 ஓட்­டங்­க­ளையும், மூன்­றா­வது இன்­னிங்ஸில் இரண்டு ஓட்­டங்­க­ளையும் இலங்கை பெற்­றது.

நான்­கா­வது  இன்­னிங்ஸில் ஓட்ட­மெ­த­னையும் பெறாத இலங்கை, ஐந்­தா­வது இன்­னிங்ஸில் 2 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இலங்கை சார்­பாக  இரேஷ் கோசல, விமுக்தி சென­வி­ரட்ன, சாதர அபே­ரட்ன ஆகியோர் தலா 2 ஓட்­டங்­க­ளையும், நவீன் கஸ்­தூரி, சமீர ரத்­நா­யக்க, சின்தக்க இந்­துனில், சுபாஷ் குண­சிறி, நிரோசன் சியா­ரட்ன, ஏ.பீரிஸ், எஸ், குண­சே­கர, ஆகியோர் தலா ஒரு ஓட்­டத்­தையும் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

முன்­ன­தாக இலங்கை அணி இந்­தி­யா­வு­ட­னான போட்­டியில் 2–1 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது.

பங்­க­ளா­தேஷை வீழ்த்­திய பாகிஸ்தான்
குழு பி யில் பங்­க­ளா­தேஷை 17–0 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிகொண் டது.
பாகிஸ்தான் தனது ஆரம்பப் போட்­டியில் ஈரானை 11–0 என்ற ஓட்­டங்கள் கணக்கில் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!