தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)

0 1,735

கிறீஸ் நாட்டில், பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக, கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ இணை­யத்தில் பரவி வரு­கி­றது.

 

கிறீஸின் வட­மேற்கு பகு­தியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்­க­ரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்­துள்­ளது. கடற்கரைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகள் விமான நிலை­யத்தில் தரை­யி­றங்க வரும் விமா­னங்கள் மிகவும் தாழ்­வாகப் பறக்கும்.

அவ்­வி­மா­னங்கள் பறக்­கும்­போது பய­ணிகள் செல்பீ எடுப்­பது வழக்கம். ஆனால், விமா­னங்கள் தரை­யி­றங்­கும்­போது, விமான என்­ஜின்­களில் இருந்து வெளிப்­படும் வேக காற்­றினால் சுற்­றுலாப் பய­ணிகள் தூக்கி வீசப்­பட்டு காய­ம­டை­யவோ, உயி­ரி­ழக்­கவோ நேரிடும் என்­பதால் ஓடு­த­ளத்தின் முன்­பாக ‘செல்பி’ எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என்று அந்­நாட்டு அரசு அறி­வு­றுத்தி வரு­கி­றது.

இந்த நிலையில், ‘பிரிட்டிஷ் எயார்வேஸ்’ நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பய­ணிகள் விமானம் ஒன்று ஸ்கியாதோஸ் விமான நிலை­யத்­துக்கு வந்­தது.

இந்த விமானம் ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக வழக்­கத்தை விட தாழ்­வாகப் பறந்து வந்­தது. அதா­வது கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­தது.

ஆபத்தை உண­ராத சுற்­றுலாப் பய­ணிகள் வழக்கம் போல விமா­னத்தின் கீழ்­ப­கு­தியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்­துக்­கொண்­டனர். விமானம் மிகவும் தாழ்­வாகப் பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!