ஜப்பானில் தீயினால் 24 பேர் பலி: திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம்

24 dead in suspected arson attack on Japan animation studio

0 2,073

ஜப்பானில் கட்டடமொன்றில் இன்று ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானின் கியோட்டோ நகரிலுள்ள அனிமேஷன் நிறுவனமொன்றின் கட்டடத்தில் இன்று வியாழக்கிழம காலை இத்தீ ஏற்பட்டது.

இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தீவைப்பு தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இப்பாரிய தீ வேண்டுமென்றே மூட்டப்பட்டதாக தென்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இதற்கான நோக்கம் என்னவாக இருக்கலாம் என்பது குறித்து பொலிஸார் எதையும் தெரிவிக்கவில்லை. (Photo: AFP)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!