வைத்தியர் ஷாபி விவகாரம்: விசாரணை பொறுப்பை சிஐடியிடமிருந்து நீக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை

0 423

வைத்தியர் ஷாபி தொடர்பாக விசாரணை பொறுப்பை குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிஐடி) இருந்து நீக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள பொலிஸ் ஆணைக்குழு, வைத்தியர் ஷாபி தொடர்பான மேலதிக விசாரணை பொறுப்பை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் தம்மால் திருப்தியடைய முடியாதுள்ளதாக மனுதாரர் தரப்பினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை கருத்திற்கொண்ட பொலிஸ் ஆணைக்குழு, இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!