வரலாற்றில் இன்று: ஜூலை 18 : 1996-முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் புலி­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டது

0 171

1656 : போலந்து, மற்றும் லித்­து­வே­னியப் படைகள் வோர்­சோவில் சுவீ­டனின் படை­க­ளுடன் போரை ஆரம்­பித்­தன. சுவீடிஷ் படைகள் இப்­போரில் வெற்றி பெற்­றன.

1872 : ஐக்­கிய இராச்­சி­யத்­திலும் அயர்­லாந்­திலும் இர­க­சிய வாக்­கெ­டுப்பு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1916 : யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற பெரும் சூறா­வ­ளியில் பலர் கொல்­லப்­பட்­டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள் சேத­ம­டைந்­தன.

1925: அடோல்வ் ஹிட்லர் தனது மெய்ன் கேம்ப் எனும் நூலை வெளி­யிட்டார்.

1944 : இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்­பட்ட பல தோல்­வி­களை அடுத்து ஜப்­பா­னியப் பிர­தமர் ஹிடெக்கி டோஜோ பத­வியைத் துறந்தார்.

1965 : சோவி­யத்தின் சோண்ட் 3 விண்­கலம் ஏவப்­பட்­டது.

1966 : நாசாவின் ஜெமினி 10 விண்­கலம் ஏவப்­பட்­டது.

1968: இன்டெல் நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1977 : ஐக்­கிய நாடுகள் சபையில் வியட்­நாம் இணைந்­தது.

1982 : குவாத்­த­மா­லாவில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 268 மாயன் பழங்­கு­டி­யினர் இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1984 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் உண­வ­க­மொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் 21 பேர் உயி­ரி­ழந்­தனர். 19 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர். துப்­பாக்­கி­தாரி ஜேம்ஸ் ஹியூ­பேர்ட்டி காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்டான்.

1995 : கரி­பியன் தீவான மொன்­செ­ராட்டில் சௌபி­யரே மலை வெடித்­ததில், வெடித்துச் சித­றி­யதன் கார­ண­மாக ‎மொன்­செ­ராட்டின் தலை­ந­கரம் அழிக்­கப்­பட்­ட­துடன் மண்­ட­லத்தின் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் தீவை விட்டு வெளி­யே­றினர்.

1996 : முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டது.

1997 : மும்­பாயில் 10 சிறு­வர்கள் காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்ட நிகழ்­வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கல­கத்தில் ஈடு­பட்­டனர்.

2007 : மும்­பாயில் ஏழு மாடிக் கட்டடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

2017: வட மத்திய மாகாண சபையில் உறுப்பினர்களுக் கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. செங்கோலும் சேதமாக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!