‘பிக் பொஸ்’ குறித்து வனிதா

0 129

கடந்தவாரம் ‘பிக் பொஸ்’ 3 வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயகுமார்.அவர் இவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் ‘பிக் பொஸ்’ குறித்து வனிதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, தொலைக்காட்சி, செல்போன் இல்லாமல் இருந்தது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை.

நான் செல்போனும், கையுமாக இருக்கும் ஆள் இல்லை.

என் குழந்தைகளை விட்டுவிட்டு இருந்தது தான் கஷ்டமாக இருந்தது.

மேலும் என் மகள் யாருடன் இருப்பது என்பது குறித்த சட்ட பிரச்சினை வேறு சென்று கொண்டிருக்கிறது.

இவ்வளவு சீக்கிரத்தில் நான் வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இருப்பினும் நான் தான் வெளியேற்றப்படுவேன் என்று எனக்குத் தோன்றியது.

என் குழந்தைகளை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் இல்லாமல் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சி போர் அடிப்பதாக சமூக வலைத்தளங்களில் போடப்பட்டுள்ள போஸ்ட்டுகளைப் பார்த்தேன்.

மக்கள் என்னை மிஸ் பண்ணுவது மகிழ்ச்சியாக உள்ளது.

‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களின்போதும் என்னை அழைத்தார்கள்.

நான் சர்ச்சை பார்ட்டி என்பதால் என்னை ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முயற்சி செய்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன் அதைத் தான் சர்ச்சை என்றுத் சொன்னேன். ஏதாவது பிரச்சினை என்றால் அதை கண்டும் காணாமல் போக என்னால் முடியாது.

‘பிக் பொஸ்’ வீட்டில் நாள் முழுக்க நிறைய நடக்கிறது. ஆனால் அதை எல்லாம் எடிட் செய்து ஒரு மணிநேரம் மட்டும் காண்பிப்பது நியாயம் இல்லை.

நான் யாருடனாவது வாக்குவாதம் செய்த பிறகு அவர்களுடன் நன்றாக பேசியிருக்கலாம். ஆனால் அதை பார்வையாளர்களுக்கு காட்டாததால் அவர்களுக்கு தவறான எண்ணமே ஏற்படும்.

அழுகிற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்று என் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர். அது உண்மையே. பிக் பாஸுக்கும் அது பொருந்தும். எங்கள் தேவைக்காக பிக் பாஸிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

‘பிக் பொஸ்’ வீட்டில் நடப்பதை மக்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் ‘பிக் பொஸ்’ வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம், சண்டை போட்டோம், சிரித்தோம், அழுதோம் என்கிறார் வனிதா.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!