மழையில் நனைந்த துப்பாக்கியை தீயில் உலர்த்த முயன்றபோது வெடித்ததால் ஒருவர் பலி!

0 225

                                                                                                                                          (செ.தேன்மொழி)
இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேட்டைக்காக துப்பாக்கியை தயார்படுத்திக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி திடீர் என்று வெடித்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பெல்மடுல்ல- இந்திகெட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பிரியந்த புஷ்ப விஜேசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வேட்டைக்காக கட்டுத் துப்பாக்கியை தயார்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த துப்பாக்கி மழையில் நனைந்திருந்ததால் முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த தீயில் துப்பாக்கியைக் உலர்த்த முயற்சித்தபோதே துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!